Last Updated:
சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், கடந்த 7 ஆம் தேதி தனது மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால், தமிழ்நாட்டில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம், கடந்த 7 ஆம் தேதி தனது மாநிலங்களவை எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
இதே போல் மகாராஷ்டிராவில் அஜித்பவார் மறைவையடுத்து, பாராமதி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவரது மனைவி சுநேத்ரா பவார், கடந்த 6 ஆம் தேதி தனது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்தார். காலியாக உள்ள இந்த இரண்டு இடங்களுக்கும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதேபோல, 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் நிறைவடைகிறது. குறிப்பாக கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா, மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங், ஜார்ஜ் குரியன் ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடைய உள்ளன.
காலியாகும் இந்த மாநிலங்களவை இடங்களுக்கும் ஜூன் 18-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை ஜூன் 1 முதல் 8 வரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


