Last Updated:
PM Modi | கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், கடந்த காலத்தை பார்க்காமல், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடிக்கும்படியும் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அனைத்துத் துறை சார்ந்த அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், இணையமைச்சர்கள் உட்பட அனைத்துத் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் இரவு 9.30 மணி வரை நீடித்தது.
இதில், எரிபொருள் தட்டுப்பாடு, அதனை எதிர்கொள்ள வேண்டிய முறைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும், மேற்காசிய மோதல் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோப்புகளை தாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும், நிலுவைப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து வரும் நிலையில், கடந்த காலத்தை பார்க்காமல், முன்னோக்கிப் பார்க்க வேண்டிய தருணம் இது என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
வேளாண்மை, தொழிலாளர், சாலைப் போக்குவரத்து, கார்பரேட் விவகாரங்கள், வெளியுறவு, வர்த்தகம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் தங்கள் சீர்திருத்தங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விளக்கின. ஜூன் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கும் சூழலில், இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
4.30 மணி நேரம் பிரதமர் மோடி ஆலோசனை… அமைச்சர்களுக்கு போட்ட உத்தரவு – ஜூன் 2வது வாரம் நடக்கும் சம்பவம்!


