இஸ்ரேல் பிரதமர் தேர்தலில் தான் போட்டியிட கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்காவில் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இஸ்ரேலுக்குச் செல்வது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்த ட்ரம்ப், இஸ்ரேலில் தனக்கு 99 சதவீத ஆதரவு இருப்பதாகவும், அடுத்த இஸ்ரேலியப் பிரதமராகப் போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகு கூறுவதை எல்லாம் செய்யத் தயார்
எனினும் அவர் இதை வேடிக்கையாகவே தெரிவித்தார் என ஊகிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை பாராட்டிய ட்ரம்ப் , அவர் கூறுவதை எல்லாம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இஸ்ரேலில், ஆளும் கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல் ஒரு பெரும் சவாலாக உள்ளது. எனவே, அங்கு நெதன்யாகுவுக்கு உரிய கவனம் கிடைக்கவில்லை என்று ட்ரம்ப் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

