யாழில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று (20-05-2026) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி இருவருடன் பயணித்த குறித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த இரு இளைஞர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இளைஞர்கள் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
