டிரிப்யூன் இந்தியா கட்டுரையின்படி, இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டவுடன், EPFO உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து யுபிஐ கட்டண நுழைவாயில் மூலம் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மாற்றிக்கொள்ள முடியும். இதற்காக, பயனாளிகள் தங்கள் கணக்குடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் எண்ணைப் பயன்படுத்தி பரிவர்த்தனையைப் பாதுகாப்பாக முடிக்க வேண்டும். தற்போது, பிஎஃப் பணத்தை எடுக்க, விண்ணப்பித்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் முக்கிய நோக்கம், இந்தத் தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சாமானிய மக்களுக்கு அதிவேக சேவைகளை வழங்குவதாகும்.


