• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

இலங்கையில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக ஆரம்பமாகியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் 50 மிமீக்கு மேல் பலத்த மழை பெய்யும்.

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அங்கு சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். காற்று தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாகப் புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும், கொழும்பிலிருந்து காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read More

Previous Post

CSK Play off : ராஜஸ்தான் அணியால் ஏற்பட்ட நெருக்கடி.. ப்ளே ஆஃப் சுற்றுக்கு  சென்னை அணி முன்னேறுமா?

Next Post

சரவாக் தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவவுள்ளது – Malaysiakini

Next Post

சரவாக் தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவவுள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin