• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சரவாக் தனது சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவவுள்ளது – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சரவாக் தனது சொந்த விண்வெளி முகமையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அந்த மாநிலத்தின் முதல்வர் அபாங் ஜொஹாரி ஒப்பேங் இன்று தெரிவித்தார்.

திட்டமிடுதல், கூட்டாண்மைகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பான முதன்மை ஒருங்கிணைப்பு அமைப்பாக இந்த முகமை செயல்படும்.

இதுதவிர, சரவாக்கின் விண்வெளித் துறையை நிறுவுவதற்குத் தேவையான உத்திப்பூர்வ வழிகாட்டுதல்களையும் விரிவான ஆலோசனைகளையும் வழங்க ‘சரவாக் விண்வெளி ஆலோசனைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது என்று மாநில சட்டமன்றத்தில் அவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்-டைம் தரவுகள் மற்றும் பூமி கண்காணிப்புக்காக சிறிய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தும் கியூப்சாட் தளங்கள் மூலம், 2030-ஆம் ஆண்டிற்குள் சரவாக் தனது முதல் நானோ-செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இலக்கு வைத்துள்ளது.

“திட்டமிடுதல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் வள மேலாண்மை ஆகியவற்றிற்கான பூமியின் படங்கள், புவிஇருப்பிடம் மற்றும் உத்திப்பூர்வ தகவல்களைப் பெறுவதற்கு, சரவாக் தனது சொந்த செயற்கைக்கோள் அமைப்பை உருவாக்கும் திறனைப் பெறும்,” என்று அவர் கூறினார்.

தனித்தனியாக, ஏர்போர்னியோ நிறுவனம் கட்டம் கட்டமாக உருவாக்கப்பட்டு வருவதாக அபாங் ஜொஹாரி தெரிவித்தார். இதில், முதற்கட்டமாக சபா மற்றும் சரவாக்கிற்குள் இருக்கும் கிராமப்புற வழித்தடங்களுக்கு சேவை வழங்குவதற்காக, பொதுச் சேவை கடமை  செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

சந்தை தேவை மற்றும் விமானங்கள் கிடைப்பதைப் பொறுத்து, ஏர்போர்னியோ தனது சேவைகளை உத்திப்பூர்வ உள்நாட்டு மற்றும் பிராந்திய வணிக வழித்தடங்களுக்கு இரண்டாம் கட்டத்தில் விரிவாக்கம் செய்யும்.

“அதன் ஆரம்பகட்ட ஜெட் விமான செயல்பாடுகளுக்காக, கூச்சிங்கில் இருந்து கோலாலம்பூர், கோத்தா கினபாலு, ஜகார்த்தா மற்றும் சிங்கப்பூர் ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் 2026 ஜூலைக்குள் சேவைகளைத் தொடங்க ஏர்போர்னியோ திட்டமிட்டுள்ளது.

சரவாக்கை போர்னியோவின் முக்கிய நகரங்களுடன் இணைப்பதே எங்களது தொலைநோக்கு பார்வை ஆகும். நேரடி விமான இணைப்புகள் மூலம், ஏர்போர்னியோ சரவாக் மக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவிற்கான புதிய வழிகளையும் உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.

 

 

 

 

-fmt



Read More

Previous Post

தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பம் – பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை – Sri Lanka Tamil News

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin