• Login
Sunday, May 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 17, 2026 1:23 PM IST

மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பந்தி பாகீரத்
பந்தி பாகீரத்

மத்திய இணையமைச்சரின் மகன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மே 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய் குமார் தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். இவரது மகனான பந்தி பாகீரத், 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்படி கடந்த 8ஆம் தேதி பண்டி பாகீரத்துக்கு எதிராக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இது தொடர்பாக பண்டி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தெலங்கானா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து, அந்தச் சிறுமியும் அவரது குடும்பத்தினரும் தன்னிடம் நெருக்கம் காட்டியதாகவும், பின்னர் அச்சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தன்னை வற்புறுத்தியதாகவும் பண்டி பாகீரத் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐதராபாத் அருகே பண்டி பகீரத்தை காவலர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பண்டி சஞ்சய் குமார், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும், தன் மகன் குற்றம் இழைக்கவில்லை என்பதை சட்டப்படி நிரூபிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Location :

Hyderabad,Hyderabad,Telangana

Read More

Previous Post

வட்டுக்கோட்டை பொன்னைாலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Next Post

ஒளிச்சுடர்கள் என்ற அரசுசாரா இயக்கம் உதயம் | Makkal Osai

Next Post
ஒளிச்சுடர்கள் என்ற அரசுசாரா இயக்கம் உதயம் | Makkal Osai

ஒளிச்சுடர்கள் என்ற அரசுசாரா இயக்கம் உதயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin