Last Updated:
ரேவந்த் ரெட்டி அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
2029 மக்களவைத் தேர்தலில் ’இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பிரதமர் பதவிக்கான தனிப்பட்ட லட்சியத்தை விட, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தி ஆட்சிக்குக் கொண்டு வருவதே ராகுல் காந்தியின் முதன்மையான நோக்கமாக இருப்பதாகக் கூறினார். இருப்பினும் அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ராகுல் காந்தியை தலைமைப் பொறுப்பை ஏற்கும்படி தான் வற்புறுத்தியதாகவும் தெரிவித்தார்.
அடுத்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ’இந்தியா’ கூட்டணியின் பிரதமர் முகமாக முன்னிறுத்தப்படுவார் என்று கூறிய ரேவந்த் ரெட்டி, தங்களது கூட்டணி சார்பில் பொதுவான கொள்கை விளக்க அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக உயர்த்துவதே தனது இலக்கு என்று கூறிய ரேவந்த் ரெட்டி, அடுத்த பத்தாண்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
2034 ஆம் ஆண்டு வரை தெலங்கானா முதலமைச்சராக தொடர்வேன் என்றும் அதன்பிறகு தனது அனுபவத்தை தேசிய அளவில் பகிர்ந்து கொண்டு, நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறினார்.
Hyderabad,Hyderabad,Telangana
“இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக இவரை தான் நியமிக்க வேண்டும்..” – தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்!


