கல்கிஸ்ஸ, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் படோவிட்ட, கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த நபர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்தவர் என்றும், அவரது கழுத்துப் பகுதியில் சிறிய வெட்டுக் காயம் ஒன்று காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸ காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

