காலி துறைமுக காவல்துறை பிரிவில் உள்ள காலி – உடுகம சாலையில், மக்குலுவ சந்திப்பில், உடுகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் முன்பக்கக் கதவிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
நேற்று இரவு (15) நடந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, காயமடைந்த பயணியான இளைஞர் கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் ஓட்டுநர் கைது
உயிரிழந்தவர் காலி பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஆவார்.
பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் காலி துறைமுக காவல்துறையினர்மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

