
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருவிற்ற, வெலிஹிந்த பகுதியில் கடந்த 2026.05.12 அன்று காலை வேளையில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசேட சோதனையொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இரவு வேளையில் வீடொன்றுக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி அச்சுறுத்தி மாணிக்கக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கொள்ளையிடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குருவிற்ற பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபராவார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 2026.05.13 அன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் 2026.05.25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



