ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கக் குழுவினர் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஈரான் தரப்பிலிருந்து திருப்தியற்ற பதில்களே வந்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் கைவிடப்படவில்லை என்பதை அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் முதன்மைத் தூதுவர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோருடனும், அரபு நாடுகளின் பிரதிநிதிகளுடனும் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாக வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுதக் கனவு
இந்த பேச்சுவார்த்தைகளின் முக்கிய நோக்கம், ஜனாதிபதியின் சிவப்புக் கோடு என்று வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை எட்டுவதே ஆகும் என தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: Ohio Capital Journal
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெற்றுவிடக் கூடாது என்பதில் அமெரிக்க நிர்வாகம் மிக உறுதியாக இருப்பதாகவும், அதுவே இந்த ஒப்பந்தத்தின் மையப்புள்ளி என்றும் துணை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
போதுமான பாதுகாப்பு நடைமுறைகளை உறுதிப்படுத்துவதன் மூலம், ஈரானின் அணு ஆயுதக் கனவை முறியடிப்பதே ஜனாதிபதி ட்ரம்பின் முதன்மை இலக்கு என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
