கோலாலம்பூர்:
அனைத்துலக சந்தையில் எரிபொருள் விலை சரிந்துள்ளதைத் தொடர்ந்து, மலேசியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் மே 14 முதல் மே 20 வரை அமலில் இருக்கும்.
குறைக்கப்பட்ட விலையின் அடிப்படையில் ஒரு லிட்டருக்கான டீசல் (மானியம் இல்லாதது): 30 சென் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் RM4.87 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் RON 97: 20 சென் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் RM4.70 (பழைய விலை RM4.90) ஆக விற்பனை செய்யப்படும்.
RON 95 – மானியம் இல்லாதது: 15 சென் குறைக்கப்பட்டு, ஒரு லிட்டர் RM3.87 (பழைய விலை RM4.02) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி விலை நிர்ணய முறை (APM) சூத்திரத்தின் அடிப்படையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் மற்றும் மானியம் இல்லாத ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் வகைகளுக்கு இந்த மாற்றம் பொருந்தும்.
இருப்பினும், மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் காரணமாக, எரிபொருள் விலைகள் இன்னும் இயல்பு நிலையை விட அதிகமாகவே இருப்பதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விலை மாற்றம் நாளை (மே 14) முதல் அமலுக்கு வருகிறது.
The post குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: வாகன ஓட்டிகளுக்கு நற் செய்தி! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

