திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுகிறார்.
மு.க. ஸ்டாலின் தலைமையில் மே 7 ஆம் திகதி நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக இன்று (மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.”சட்டப் பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 மாலை 5.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்றக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின், துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

