Last Updated:
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது
ஐபிஎல் கிரிக்கெட் லக்னோ அணிக்கு எதிராக இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2026 தொடரின் 53-வது லீக் போட்டியில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எடுத்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இங்கிலிஸின் அதிரடியால் பவர்-பிளே ஓவர்களில் மட்டும் லக்னோ அணி 91 ரன்களைக் குவித்தது. அவருக்கு அடுத்தபடியாக ஷாபாஸ் அகமது ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 200-ஐக் கடக்க உதவினார்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 203 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய உர்வில் படேல் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். 23 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்சர் 2 பவுண்டரியுடன் 65 ரன்கள் குவித்தார்.
கார்த்திக் சர் 20 ரன்களும், டெவால்ட் ப்ரெவிஸ் 10 ரன்களும் எடுத்து அடுத்தடுத்த ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டபோது 19.2 ஓவர்களில் சிஎஸ்கே 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி தரப்பில் சிவம் துபே 15 ரன்களும், பிரசாந்த் வீர் 18 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

