பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வசம் இருக்கக்கூடிய அமெரிக்க டாலரின் இருப்பு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய வங்கிகள் அமெரிக்க டாலரை குறைத்து விட்டு அதிகமாக தங்கத்தை வாங்கி சேமிக்க தொடங்கி இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. முன்பு சீனா, ரஷ்யா, இந்தியா, துருக்கி போன்ற நாடுகளின் வங்கிகள் தான் அதிகமாக தங்கத்தை வாங்கும் ஆனால் தற்போது கசகஸ்தான், சவுதி, கத்தார் ஆகிய நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கின்றன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


