Last Updated:
ஸ்பெயின் கடற்படை அட்லாண்டிக் கடலில் கப்பலில் இருந்து 30 டன் கோகைன், ஆயுதங்கள் பறிமுதல், பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து சேர்ந்த 23 பேர் கைது, 9 ஆயிரம் கோடி மதிப்பு
ஐரோப்பிய வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஸ்பெயினில் கடல் வழியாக கடத்தப்பட்ட 30 டன் கோகைன் போதைப்பொருளை காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கே அட்லாண்டிக் கடலில் சந்தேகத்திற்கிடமாக நின்ற கப்பலை கடற்படையினர் சோதனையிட்டனர். அப்போது, கப்பலில் இருந்து 30 டன் கோகைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து, கப்பலில் இருந்த பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 17 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பிணையில் விடாமல் சிறையில் அடைக்க ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பிடிபட்ட போதைப் பொருளின் விலை இந்திய மதிப்பில் 9 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜெர்மனியின் ஹாம்பர்க் துறைமுகத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 டன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதே ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய போதைப் பொருள் பறிமுதல் நடவடிக்கையாக இருந்தது. தற்போது அதை விட 5 டன் போதைப் பொருள் கூடுதலாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.


