அமெரிக்கா முன்வைத்துள்ள 14 அம்சத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று தெஹ்ரானின் மூலோபாய ஆய்வு மையத்தின் ஆராய்ச்சியாளர் அலி அக்பர் தாரினி தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவின் இந்தத் திட்டம் இன்னும் அதிகப்படியான கோரிக்கைகளை கொண்டாகவும்
ஈரானை முற்றாகச் சரணடைந்து எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்குமாறு கோருவதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம், ட்ரம்ப் இஸ்ரேலின் நிலைப்பாட்டை அப்படியே நம்புவதுதான் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் முடிவு
அதாவது, ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது அடிபணியும் என்ற இஸ்ரேலியக் கருத்தை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, இனியும் நடக்கப்போவதில்லை என்று கூறியுள்ள தாரினி, ஈரானின் மன உறுதி மற்றும் தாங்கும் திறன் குறித்து ட்ரம்பிற்கு எவ்வித புரிதலும் இல்லை என்றும், அதனால்தான் அவர் இந்தச் சிக்கலில் சிக்கியுள்ளார் என்றும் விமர்சித்துள்ளார்.
மேலும், ட்ரம்ப் இந்தப் போரைத் தொடங்கியிருக்கலாம், ஆனால் அவரால் இந்தப் போரை வெல்லவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

