• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பிஎம் கிசான் நிதி ரூ.9,000-ஆக உயர்வு? விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
May 6, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பிஎம் கிசான் நிதி ரூ.9,000-ஆக உயர்வு? விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 06, 2026 10:12 PM IST

22-வது தவணை மார்ச் 2026-ல் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாதிரி படம்
மாதிரி படம்

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரூ.6,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் போது, அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி ரூ.9,000-ஆக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது தேர்தல் முடிவுகளில் அங்கு பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

தற்போது இத்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று தவணைகளாக தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிதி உயர்வு தொடர்பாக ‘மகாராஷ்டிரா மாடல்’ ஒரு முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிராவில் மத்திய அரசின் ரூ.6,000 நிதியுடன், மாநில அரசு தனது ‘நமோ ஷேத்காரி மகாசம்மான் நிதி’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.6,000 வழங்கி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் ரூ.12,000 கிடைக்கச் செய்கிறது.

இதேபோன்ற நடைமுறை மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விவசாயிகள் இத்திட்டத்தின் 23-வது தவணைக்காகக் காத்திருக்கின்றனர். 22-வது தவணை மார்ச் 2026-ல் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணை ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் பலன்களைப் பெற விவசாயிகள் சில முக்கியமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

குறிப்பாக, பயனாளியின் வங்கிக் கணக்கு கட்டாயம் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் e-KYC நடைமுறை முழுமையாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் (கணவன், மனைவி மற்றும் சிறு குழந்தைகள்) ஒருவர் மட்டுமே இந்த நிதி உதவியைப் பெறத் தகுதியுடையவர்.

விவசாயிகள் தங்களின் பெயர் தகுதியுள்ளோர் பட்டியலில் உள்ளதா என்பதை pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ‘Know Your Status’ பகுதிக்குச் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். இடைத்தரகர்கள் இல்லாத நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

Location :

Delhi,Delhi,Delhi

First Published :

May 06, 2026 10:12 PM IST

Read More

Previous Post

இந்தியா – வியட்நாம் உறவில் புதிய சகாப்தம்: 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்: 8 வாகனங்கள் சிக்கித் தவிப்பு

Next Post

கிள்ளான் பள்ளத்தாக்கில் திடீர் வெள்ளம்: 8 வாகனங்கள் சிக்கித் தவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin