• Login
Monday, May 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

101ஆக சரிந்த விஜயின் வெற்றித்தொகுதிகள் : மாற்றமடையும் தமிழக தேர்தல் முடிவுகள் (live)

GenevaTimes by GenevaTimes
May 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
101ஆக சரிந்த விஜயின் வெற்றித்தொகுதிகள் : மாற்றமடையும் தமிழக தேர்தல் முடிவுகள் (live)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் மாலை 03.30 நிலவரப்படி 112 இடங்களில் முன்னிலை வகித்த தவெகவின் வெற்றித்தொகுதிகள் 101 ஆக சரிவடைந்துள்ளது.

அத்துடன் திமுக 57 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன் அதிமுக 50 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

ஆறாம் இணைப்பு

வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு : 112 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் 02.00 நிலவரப்படி தவெக 112 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக 47  இடங்களிலும், அதிமுக 58 இடங்களிலும், நாதக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றது.

எடப்பாடி தொகுதியில் 7வது சுற்று முடிவில் எடப்பாடி பழனிசாமி 23,837 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் 10வது சுற்று முடிவில் 9,105 வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

அதிகாரபூர்வ முடிவுகள் – https://results.eci.gov.in/ResultAcGenMay2026/index.htm

ஐந்தாம் இணைப்பு

வெளியாகி வரும் தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் 12.00 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன் அதிமுக கூட்டணி 65 இடங்களிலும் திமுக கூட்டணி 60 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

இது தற்போதைய சுற்று வாக்கு எண்ணிக்கையில் 13 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளில் இதுவரை 1.5 கோடி வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 50 இலட்சம் வாக்குகளை த.வெ.க பெற்றுள்ளது.

நான்காம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காலை 11.50 நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகிப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன் அதிமுக கூட்டணி 74 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 52  இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் நாங்குநேரி தொகுதியில் 10வது சுற்றிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், மதுரை மேற்கு,  திருவிகநகர்,  கே.வி.குப்பம்,  ராதாபுரம்,  காரைக்குடி,  உத்திரமேரூர், செய்யூர், அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிக்கின்றது.

மூன்றாம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.50 மணி நிலவரப்படி தவெக 106 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அத்துடன் அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலை வகிப்பதுடன், திமுக கூட்டணி 51 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் நாமக்கலில் 3 தொகுதிகளில் தவெக. முன்னிலை வகிப்பதுடன், கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகிக்கின்றார்.

101ஆக சரிந்த விஜயின் வெற்றித்தொகுதிகள் : மாற்றமடையும் தமிழக தேர்தல் முடிவுகள் (live) | Tamil Nadu Assembly Election Results 2026

இதேவேளை வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை 10.40 நிலவரப்படி வரை த,வெ,க 33.9 சதவீத வாக்குகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் இணைப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் காலை 10.30  நிலவரப்படி 234 தொகுதிகளில் 102 இடங்களில் தவெக முன்னிலை வகிப்பதுடன், 81 இடங்களில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிப்பதுடன் 51 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.

இந்தநிலையில் எந்த கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையில் மொத்தம் உள்ள 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகிப்பதுடன், துறைமுகம், விருத்தாசலம், காங்கேயம், திருப்பூரில் 5 தொகுதிகள், தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 5 தொகுதிகள், திருப்பரங்குன்றம், அம்பத்தூர், மாதவரம், ஆலந்தூர், வில்லிவாக்கம், திண்டுக்கல், திருவெறும்பூர்,  பொள்ளாச்சி, பல்லடம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, வேளச்சேரி, திருப்போரூர், மதுரை மேற்கு, ராதாபுரம், மதுரை மத்திய தொகுதி, ராயபுரம் ஆகிய தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்துள்ளது.

இந்தநிலையில், வில்லிவாக்கம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா முன்னிலை வகிப்பதுடன், மதுரை மத்திய தொகுதியில் த.வெ.க வேட்பாளர் முஸ்தபா முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுகவைச் சேர்ந்த 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் வரும் நிலையில் சற்று முன்னர் வரை வெளியான முடிவுகளின் படி திமுகவின் முக்கிய அமைச்சர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பலரும் பின்னடைவை சந்தித்துள்ளதுடன் தவெகவின் புதுமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

அந்தவகையில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. முன்னிலையில் உள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.

திமுக அமைச்சர்களான கீதா ஜீவன், நாசர், முத்துசாமி, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்களும் பின்னடைந்துள்ளனர்.

பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்களின் தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

101ஆக சரிந்த விஜயின் வெற்றித்தொகுதிகள் : மாற்றமடையும் தமிழக தேர்தல் முடிவுகள் (live) | Tamil Nadu Assembly Election Results 2026

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து போட்டியிட்ட இயக்குநர் சுந்தர்.சி தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார்.

you may like this 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

Read More

Previous Post

“நீர்விழாவின் போது கத்தியை காட்டிய பெண் பஹாகியா மருத்துவமனைக்கு (Hospital Bahagia) அனுப்பப்பட்டார்.” – Malaysiakini

Next Post

5 State Election Results Live Updates | வாக்கு எண்ணிக்கை: எந்த மாநிலத்தில் யார் முன்னிலை? அரியணை யாருக்கு? முழு விவரம்…! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
5 State Election Results Live Updates | வாக்கு எண்ணிக்கை: எந்த மாநிலத்தில் யார் முன்னிலை? அரியணை யாருக்கு? முழு விவரம்…! | India News (இந்தியா செய்திகள்)

5 State Election Results Live Updates | வாக்கு எண்ணிக்கை: எந்த மாநிலத்தில் யார் முன்னிலை? அரியணை யாருக்கு? முழு விவரம்...! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin