Last Updated:
விடுமுறை காலத்தையொட்டி சீனா விழாகோலம் பூண்டுள்ளது.
சீனாவில் மே மாத விடுமுறையையொட்டி அந்நாட்டில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் அந்நாட்டில் மே 1 முதல் 5ஆம் தேதி வரை மே தின விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையொட்டி பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். விடுமுறை நாட்களையொட்டி அந்நாட்டின் வடக்கு பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹுனான் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் படகில் சென்று மகிழ்ந்தனர்.
இதே போல குதிரை பந்தயம், கலை நிகழ்ச்சிகள் என விடுமுறை காலத்தையொட்டி சீனா விழாகோலம் பூண்டுள்ளது. இதனால் தங்கள் வியாபாரம் அதிகரிப்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


