இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ரக பெட்ரோல் ஆகியவற்றின் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவுமில்லை என அந்த நிறுவனம்அறிவித்துள்ளது.
இதற்கமைய, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 392 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 410 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
அத்துடன் ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாமல் இருக்க லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (02) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
புதிய எரிபொருள் விலையின் அடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 410.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் விலை
அதற்கமைய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலையாக 470.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஓட்டோ டீசல் 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 392.00 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 458.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 265.00 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

