இந்தியாவில் சிட்டி முதல் பட்டித்தொட்டி வரை சிலிண்டர் இல்லாத வீடுகள், உணவகங்களே இல்லை எனும் வகையில் மக்களின் வாழ்க்கையோடு ங்கு வகிப்பது எரிவாயு சிலிண்டர்.
இந்த நிலையில், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை 993 ரூபாய் உயர்த்தி 3 ஆயிரத்து 237 ரூபாய்க்கு விற்பனையாகும் என்ற எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயிரத்து 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக சிலிண்டர், அடுத்தடுத்த மாதங்களில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் ஆயிரத்து 924 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதே போன்று, கடந்தாண்டு ஜனவரி மாதம் ஆயிரத்து 966 ரூபாய்க்கும், இந்தாண்டு ஜனவரியில் ஆயிரத்து 849 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. அதன்பிறகு, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் 2 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருந்த நிலையில், மே ஒன்றாம் தேதி சுமார் ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு ஆகியவை முக்கியக் காரணங்களாக உள்ளன.
வணிக சிலிண்டர் இந்த அதிரடி விலை உயர்வு, தேநீர்க் கடைகள், சிற்றுண்டி உணவகங்கள், ஹோட்டல்கள் வைத்திருப்போரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியுள்ளது.
வணிக சிலிண்டர் தானே விலை உயர்ந்துள்ளது, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஏற்றம் இல்லையே என நிம்மதி பெருமூச்சு விட முடியாது. காரணம் வணிக சிலிண்டர் விலை உயர்வால், உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
டீ, காபி, டிபன் மற்றும் மதிய உணவுகளின் விலை அதிகரிப்பதால், வேலைக்குச் செல்வோர் மட்டுமின்றி பேச்சுலர்களின் மாதாந்திர பட்ஜெட்டும் எகிறியுள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வணிக சிலிண்டருக்கான விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் எல்.பி.ஜி. விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு என்றும் மேற்காசியப்போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல எனவும் கூறியுள்ளார்.
कह दिया था – चुनाव के बाद महंगाई की गर्मी आएगी।
आज कमर्शियल गैस सिलेंडर ₹993 महंगा। एक ही दिन में सबसे बड़ी बढ़ोतरी। यह चुनावी बिल है।
फरवरी से अब तक: ₹1,380 की बढ़ोतरी – सिर्फ़ 3 महीनों में 81% का इज़ाफ़ा।
चायवाला, ढाबा, होटल, बेकरी, हलवाई – हर किसी की रसोई पर बोझ बढ़ा। और…
— Rahul Gandhi (@RahulGandhi) May 1, 2026
இதே போன்று, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், தேர்தல் முடிந்துவிட்டதால் தற்போது வணிக சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
