இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள், 60 வயதை நிறைவு செய்த பிறகு, தங்கள் முதலீட்டிற்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். அடல் பென்சன் திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது.


