Last Updated:
2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கங்கனாடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குண்டு வெடித்தது.
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கங்கனாடி காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணையில் முகமது ஷாரிக்கிற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து விசாரணை நடத்தி வந்தது. அதில் தென் மாநிலங்களில் உள்ள கோயில்களில் குண்டுகள் வைக்க தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து முகமது ஷாரிக் திட்டமிட்டது அம்பலமானது.
மேலும் மங்களூரு கத்ரி மஞ்சுநாதா கோயிலில் குண்டு வைப்பதற்காக சென்ற போது குண்டு வெடிப்பதற்கான நேரத்தை 90 நிமிடம் என்பதற்கு பதிலாக 9 நிமிடமாக வைத்ததால் ஆட்டோவில் குண்டு வெடித்தது என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். கைதான முகமது ஷாரிக் முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை, பின்னர் கடந்த டிசம்பர் மாதம் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு அவர் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது தனக்கு மகள் இருப்பதாகவும், குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் முகமது ஷாரிக் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கில் என்ஐஏ நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும 94 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Bangalore,Karnataka
Apr 28, 2026 12:09 PM IST


