Last Updated:
கடும் வெப்பம் காரணமாக முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் ஆயிரக்கணக்கானோர் விழாவில் பங்கேற்றிருந்தனர்.
கேரள கலாச்சாரத்தின் அடையாளமாகப் போற்றப்படும் திருச்சூர் பூரம் விழா, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.
‘பூரங்களின் தாய்’ என்று அழைக்கப்படும் திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூரம் விழா, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. 36 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு, இலஞ்சித்தார மேளம் மற்றும் பஞ்சவாத்யம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தின.
கடந்த 21 ஆம் தேதி முண்டத்திக்கோடு பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 15 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தால், பாதுகாப்பு கருதி பிரமாண்ட வாணவேடிக்கை ரத்து செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, யானைகளின் எண்ணிக்கை 30-ஆகக் குறைக்கப்பட்டு, விழாவின் சிகர நிகழ்ச்சியான ‘குடை மாற்றம்’ 15 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்டது.
கடும் வெப்பம் காரணமாக முதியவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த கண்கவர் விழாவில் பங்கேற்றனர்.


