வட்டி மூலம் மட்டும் 18 லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பது எப்படி? உதாரணமாக, நீங்கள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாயை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மொத்த முதலீடு: 22,50,000 ரூபாய், வட்டி விகிதம்: 7.1% ஆகும். 15 ஆண்டுகளின் முடிவில், உங்கள் மொத்த நிதி சுமார் 40,68,209 ரூபாயாக இருக்கும். அதாவது, நீங்கள் வட்டியிலிருந்து மட்டும் 18,18,209 ரூபாய் சம்பாதிப்பீர்கள்.


