இது தொடர்பாக தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இஸ்லாமாபாத் செல்ல இருந்த அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்ததாகவும், பேச்சுவார்த்தைக்காக எடுக்கும் முயற்சிகள், வீண் நேர விரயம் தேவையற்றது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈரானின் தலைமைக்குள்ளேயே யாரிடம் அதிகாரம் உள்ளது என்பதில் உட்கட்சி பூசல் நிலவுவதாக விமர்சித்துள்ள டிரம்ப், அமெரிக்காவிடமே முழு அதிகாரம் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டிரம்ப்பின் பதிவால் மீண்டும் அமெரிக்கா – ஈரான் இடையே போர் வெடிக்குமோ என்ற பதற்றம் நிலவுகிறது.

