யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை
அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில்
நேற்றையதினம் (25) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு
நடைபெற்று வருகிறது.
பெண்களை மிரட்டிய சம்பவம்
அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர்
இராமநாதன் அர்ச்சுனா கூறி வருகின்ற நிலையில், வேறொரு தரப்பினரும் அதில்
தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்றையதினம் குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில்
நாடாளுமன்ற உறுப்பினர் ஈடுபடும்போது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.
எதிரே நின்ற பெண்கள் கையில் எந்தவிதமான ஆயுதங்களோ, பொருட்களோ இல்லாமல் நின்ற
நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திடீரென தனது கை
துப்பாக்கியை எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
துப்பாக்கியை வைத்து பெண்களை மிரட்டியுள்ள இந்த சம்பவமானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு துப்பாக்கி வழங்கியுள்ளமை மக்களுக்கு ஆபத்தானது என ஏற்கனவே பலதடவைகள் பல்வேறு தரப்பினரும்
சுட்டிக் காட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இதுவரை அந்த துப்பாக்கியானது மீளப் பெறப்படவில்லை எனவும் இது இவ்வாறு தொடருமானால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் எனவும் மக்கள் அச்சம்
வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

