Last Updated:
ஜப்பானில் சுமார் 1,730 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
ஜப்பானில் மலைப்பகுதியில் மூன்று நாட்களாகப் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.
ஜப்பானின் இவாட் (Iwate) மாகாணத்தில் உள்ள ஒட்சுச்சி (Otsuchi) மலைப்பகுதியில் கடந்த புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மரம், செடி கொடிகளில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிவதால் அப்பகுதியில் கடும் புகை மூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. சுமார் 30 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு புகை பரவியதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, சுமார் 1,730 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. தீ வேகமாக பரவி குடியிருப்புப் பகுதிகளுக்கு பரவி வருவதால், 3,200-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த 1,300 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.
Japan | 3 நாட்களாக பரவும் காட்டுத்தீ… 1,700+ ஏக்கர் காடு எரிந்து சேதம்… திணறும் தீயணைப்பு வீரர்கள்!


