Last Updated:
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களை குறிப்பிட்டு பேசினார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் குரல் எழுப்புவது அராஜகம் அல்ல, நீதிக்கு பதிலாக புல்டோசர்களை அதிகாரத்தின் கருவியாக பயன்படுத்துவதுதான் அராஜகம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாணவர் போராட்டங்களை குறிப்பிட்டு பேசினார். அந்த பல்கலைக்கழகம் கிளர்ச்சியாளர்களின் கூடாரமாக மாறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய மம்தா பானர்ஜி, பல்கலைக்கழக மாணவர்களை “அராஜகம்” என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தி பிரதமர் பேசியது மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, மேற்குவங்க மாநிலம் ஹிங்கல்கஞ்ச் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதற்கட்டத் தேர்தலில் பதிவான அதிகப்படியான வாக்குகள், திரிணமுல் காங்கிரஸ் வீழ்ச்சியடைவதை காட்டுவதாகக் கூறினார்.
बंगाल के उत्तरपाड़ा में भी बस भगवा लहर है…
বাংলা থেকে TMC-কে সমূলে উৎখাত করার জন্য উদগ্রীব রাজ্যবাসীদের TMC-র গুন্ডারা দমাতে পারবে না। উত্তরপাড়াতেও শুধু গেরুয়া ঢেউ বইছে…#BanglaBolcheBJPJitche https://t.co/7UOLXiU935
— Amit Shah (@AmitShah) April 24, 2026
இந்த பரப்புரையின் போது, அமித் ஷாவை சிறுவன் ஒருவன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தான். பரப்புரையை தொடர்ந்து அமித் ஷா ரோடு ஷோவில் கலந்து கொண்டார்.


