• Login
Friday, April 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிஜிட்டல் வரி விவகாரம்: இங்கிலாந்துக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
April 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிஜிட்டல் வரி விவகாரம்: இங்கிலாந்துக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
டிஜிட்டல் வரி விவகாரம்: இங்கிலாந்துக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் வரியை நீக்காவிட்டால் இங்கிலாந்து மீது வர்த்தகப் போர் தொடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டனில் உள்ள அமெரிக்க சமூக ஊடக நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் சேவை வரியை UK கைவிடாவிட்டால், அதற்கு பதிலாக ‘பெரும் தீர்வை’ (big tariff) விதிப்பதாக எச்சரித்துள்ளார்.

2020-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரியானது, பல முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் மீது 2% வரியாகும். டிஜிட்டல் நடவடிக்கைகளில் இருந்து உலகளவில் 500 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்களையும், அதில் UK பயனர்களிடமிருந்து 25 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் பெறுவனவற்றையும் இது குறிவைக்கிறது.

வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், UK “கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரித்தார். அந்த வரி மூலம் அவர்கள் பெறுவதை விட “அதிகமான” தீர்வையே தாங்கள் விதிப்போம் என்று வலியுறுத்தினார். “நாங்கள் இதைப் பார்த்து வருகிறோம், UK மீது ஒரு பெரிய தீர்வையை விதிப்பதன் மூலம் அதை எளிதாக சமாளிக்க முடியும். அதனால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வரியைக் கைவிடாவிட்டால், UK மீது பெரும் தீர்வையை விதிப்போம்” என்று ட்ரம்ப் கூறினார்.

இதுவரை டவுனிங் ஸ்ட்ரீட் ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கவில்லை. 2025 மே மாதத்தில் அமெரிக்காவும் UKயும் ஏற்படுத்திக் கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்த டிஜிட்டல் சேவை வரி மாற்றமின்றி இருந்தது. இருப்பினும், ஸ்கை செய்தியின் மார்க் ஸ்டோனுக்கு அளித்த பேட்டியில், ஒப்பந்தத்தின் விதிமுறைகளை “எப்போதும் மாற்றலாம்” என்று ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற டிஜிட்டல் சேவை வரி உள்ளது. கடந்த ஆகஸ்டில் சமூக ஊடக பதிவொன்றில், “அமெரிக்காவின் அருமையான தொழில்நுட்ப நிறுவனங்களைத் தாக்கும் நாடுகளுக்கு எதிராக நிற்போம்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

அந்த வரிகள் “அமெரிக்க தொழில்நுட்பத்திற்கு தீங்கு விளைவிக்கவோ அல்லது பாகுபாடு காட்டவோ வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றும், “பாரபட்சமான நடவடிக்கைகள் அகற்றப்படாவிட்டால் கணிசமான கூடுதல் தீர்வைகளை விதிப்போம்” என்றும் உறுதியளித்தார்.

Read More

Previous Post

CSK | 2 நாள் முன் தாய் உயிரிழந்த சோகத்திலும்… போட்டியை வென்று கொடுத்த சிஎஸ்கே வீரர்! | விளையாட்டு போட்டோகேலரி

Next Post

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' – இந்தியா கடும் கண்டனம்

Next Post
இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' – இந்தியா கடும் கண்டனம்

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' - இந்தியா கடும் கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin