• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 22, 2026 4:10 PM IST

மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை மிகவும் சமநிலையானது.

News18
News18

உலக அரங்கில் சக்தி வாய்ந்த மற்றும் நடுநிலை நாடாக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜெர்மனிக்கு மேற்கொண்டுள்ள பயணத்தின் போது, வளைகுடா பிராந்திய பதற்றம் மற்றும் இந்தியாவின் ராஜாதந்திர அணுகுமுறை குறித்து முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது- உலகமே உற்று நோக்கும் ஹார்முஸ் ஜலசந்தி  பகுதியில் நிலவும் பதற்றமான சூழலிலும் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஈரான் – அமெரிக்கா மோதல்களால் மற்ற நாட்டு கப்பல்கள் அந்தப் பகுதியை கடக்க சிரமப்பட்ட போது, இந்தியாவின் 7 முதல் 8 கப்பல்கள் எந்த இடையூறும் இன்றி பாதுகாப்பாக கடந்து வந்தன.

இது அமெரிக்காவுடனும், ஈரான் போன்ற நாடுகளுடனும் இந்தியா கொண்டுள்ள சமநிலையான ராஜாதந்திர உறவுக்குக் கிடைத்த வெற்றி. மேற்கு ஆசிய நெருக்கடி மற்றும் உலகளாவிய மோதல்களைத் தீர்ப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் அணுகுமுறை மிகவும் சமநிலையானது.

ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் பிரதமர் இது குறித்துப் பேசியுள்ளார். போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. உலக அமைதிக்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது.

எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு. நாளை உலக அமைதிக்கான முக்கியப் பங்கை இந்தியா வகிப்பதற்கான காலம் வரலாம். அந்த வாய்ப்பை நாம் நிராகரிக்க முடியாது. இந்தியா தற்போது உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் நடுநிலையான நாடாக வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. என்று தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

உலக அரங்கில் ஒரு சக்திவாய்ந்த நாடாக இந்தியா மாறி வருகிறது.. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

Read More

Previous Post

போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை

Next Post

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு குறித்து சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்; கோபிந்த் | Makkal Osai

Next Post
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு குறித்து சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்; கோபிந்த் | Makkal Osai

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு குறித்து சட்டத்துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்; கோபிந்த் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin