பொதுவாக, முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், தங்கள் பணம் எப்போது இரட்டிப்பாகும் என்பதுதான். தற்போதைய வட்டி விகிதத்தின் அடிப்படையில், கிசான் விகாஸ் பத்ரா (KVP) திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம், சரியாக 115 மாதங்களில் (அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில்) இரட்டிப்பாகிறது. எளிமையாகச் சொன்னால், நீங்கள் இன்று இந்த திட்டத்தில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.


