இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவிற்கு வந்திருந்த நிலையில், இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் எ.பி.வூட்லர் தெரிவித்துள்ளார்.
அவிசாவளை பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்திருந்த ஒரு குழுவினருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அந்தக் குழுவினரை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இவ்வாறு, சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கிக்கு பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உரிமம் 2025-ஆம் ஆண்டில் காலாவதியாகியுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

