அரபிக் கடலில் ஈரானியக் கொடி ஏந்திய டூஸ்கா (M/V Touska) கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாக வழிமறித்துக் கைப்பற்றியதற்கான புகைப்பட ஆதாரங்களை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா முன்னெடுத்துள்ள கடற்படை முற்றுகையை மீற முயன்றதாகக் கூறி நேற்று அந்தப் பெரிய சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி முடக்கப்பட்டது.
இதையடுத்து, அமெரிக்க மரைன் வீரர்கள் (U.S. Marines) குறித்த கப்பலில் ஏறிச் சோதனையிடும் காட்சிகள் இந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்கக் கடற்படை
தற்போது அமெரிக்கக் கடற்படையின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள அக்கப்பலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்துக் கொள்கலன்களைத் திறந்து அதிகாரிகள் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நடவடிக்கை மற்றும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகை ஆகிய இரண்டின் சட்டப்பூர்வத்தன்மை குறித்துச் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மத்தியில் கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

