
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து உரையாடினார்.
கொழும்பு தாஜ் சமுத்திரா விடுத்தியில் 19-04-2026அன்று நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாவது,
“தமது முதலாவது உத்தியோகபூர்வ இருதரப்பு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணனை இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தல், பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய நடைமுறை ரீதியான வாய்ப்புகளை திறப்பது தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் நாம் ஈடுபட்டோம்.
இலங்கையும் இந்தியாவும் வெறும் அண்டை நாடுகள் மட்டுமல்ல, பொதுவான வரலாறு, பொதுவான சவால்கள் மற்றும் பொதுவான எதிர்காலம் கொண்ட உண்மையான கூட்டாளர்களுமாவர்.
அனைத்து குடிமக்களுக்கும் இந்த கூட்டுறவின் பலன்களை அடைவதற்காக அதீத அபிலாஷைகள், உறுதியான நோக்கம் மற்றும் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டிய தருணம் தற்போது வந்துள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

