• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

FAQ Womens Bill : மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்.. மத்திய அரசு வெளியிட்ட 14 முக்கிய விளக்கங்கள்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 19, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
FAQ Womens Bill : மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்.. மத்திய அரசு வெளியிட்ட 14 முக்கிய விளக்கங்கள்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கேள்வி 1: ஏப்ரல் 16, 2026 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் யாவை?

மத்திய அரசு மூன்று முக்கிய மசோதாக்களைத் தாக்கல் செய்தது: அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2026.

கேள்வி 2: இந்த மசோதாக்களை இப்போது கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருந்தால், 2029 பொதுத்தேர்தலில் கூட பெண்களால் 33% இடஒதுக்கீட்டைப் பெற முடியாது. எனவே, பெண்களுக்கு உரிய பலன் விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தொகுதி மறுவரையறை நிபந்தனையிலிருந்து இந்தச் சட்டத்தை அரசு பிரித்துள்ளது.

கேள்வி 3: இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் என்ன பயன் கிடைத்திருக்கும்?

இந்த மசோதாக்கள் நிறைவேறியிருந்தால், வரும் 2029 பொதுத்தேர்தலிலேயே பெண்கள் மக்களவையில் 33% இடஒதுக்கீட்டைப் பெற வழிவகை செய்யப்பட்டிருக்கும்.

கேள்வி 4: பெண்களுக்கான இடஒதுக்கீடு ஏன் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டது? இடங்களை அதிகரிக்க முன்மொழிந்தது ஏன்?

இடஒதுக்கீட்டைச் சரியாக அமல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம். 1971-ல் மக்கள் தொகை 54 கோடியாக இருந்தபோது 550 இடங்கள் இருந்தன. இன்று 140 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், முறையான பிரதிநிதித்துவத்திற்கு இடங்களை 850 ஆக உயர்த்துவது அவசியமாகிறது.

கேள்வி 5: தொகுதி மறுவரையறை ஆணையச் சட்டத்தில் ஏதேனும் அரசியல் ஆதாயத்திற்காக மாற்றம் செய்யப்பட்டதா? நடப்புத் தேர்தல்கள் பாதிக்கப்படுமா?

எந்த மாற்றமும் செய்யப்படவில்லை; அரசியல் ஆதாயம் எதுவும் இல்லை என்று அரசு மறுத்துள்ளது. நடைமுறையில் உள்ள சட்டமே தொடரும். மேலும், தற்போது தமிழகம் அல்லது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் தேர்தல்களில் இது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

கேள்வி 6: மக்களவை இடங்களை 850 ஆக உயர்த்தும் முடிவின் பின்னணியில் உள்ள லாஜிக் என்ன?

அனைத்து மாநிலங்களுக்கும் இடங்களைச் சீராக 50% உயர்த்துவதே அரசின் அணுகுமுறை. தற்போதுள்ள 543 இடங்களை 50% உயர்த்தினால் 815 இடங்கள் வரும். அதன் அடிப்படையிலேயே உச்ச வரம்பு 850 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

கேள்வி 7: தென்னிந்திய அல்லது சிறிய மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படுமா?

இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் சீராக உயர்த்தப்படும். இதன் மூலம் 5 தென்னிந்திய மாநிலங்களின் மொத்த இடங்கள் 129-லிருந்து 195 ஆக உயரும். மக்களவையில் அவர்களின் பங்கு 23.76%-லிருந்து 23.87% ஆகச் சற்று அதிகரிக்கும்.

கேள்வி 8: மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதனால் பின்தள்ளப்படுமா?

இல்லை. இடங்கள் அதிகரிப்பு அனைத்து மாநிலங்களுக்கும் சீராக வழங்கப்படுவதால், அந்த மாநிலங்களின் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் குறையாது; மாறாகச் சற்று மேம்படும்.

கேள்வி 9: எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமா?

பாதிக்கப்படாது. தொகுதி மறுவரையறை மூலம் மக்கள் தொகைக்கு ஏற்ப எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்களின் பிரதிநிதித்துவம் வலுப்படும்.

கேள்வி 10: சாதி வாரிக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட இந்த மசோதா கொண்டு வரப்பட்டதா?

மத்திய அரசு ஏற்கனவே சாதி வாரிக் கணக்கெடுப்பிற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட திட்டத்தைத் தொடங்கிவிட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாகச் சாதி தரவுகளும் சேகரிக்கப்படும்.

கேள்வி 11: முஸ்லிம் பெண்களுக்கு ஏன் தனி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது. இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் பொருளாதார ரீதியான பின்தங்கிய நிலையைக் கொண்டே வழங்கப்படுகிறது.

கேள்வி 12: 2024 பொதுத்தேர்தலிலேயே ஏன் இதை அமல்படுத்தவில்லை?

இடஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். இது ஒரு விரிவான ஆலோசனைகள் தேவைப்படும் நடைமுறை என்பதால், முழுமையாக முடிக்க சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

கேள்வி 13: 2023-லேயே சட்டம் கொண்டு வரப்பட்டும் ஏன் உடனே அமலாகவில்லை?

அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை உருவாக்கவே மசோதா கொண்டு வரப்பட்டது. அது அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு, தற்போது அதைச் செயல்படுத்துவதற்கான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

கேள்வி 14: யூனியன் பிரதேசங்களுக்குத் தனியாக ஏன் மசோதா தேவைப்பட்டது?

ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் தனிச் சட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே, அங்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த அந்தந்த சட்டங்களில் திருத்தம் செய்யத் தனி மசோதா தேவைப்படுகிறது.

Read More

Previous Post

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

Next Post

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார் – Sri Lanka Tamil News

Next Post
இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார் – Sri Lanka Tamil News

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தார் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin