Courtesy: nayan
மன்னார், தாழ்வுபாடு தாராபுரம் வீதியின் துர்க்கி சிட்டி கிராமத்தில் நேற்று
(18) மாலை இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
பேக்கரி உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று மோதியதில் இந்த
விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த குழந்தை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்
பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணை
மன்னார், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 01 வயது மற்றும்
06 மாதங்களான குழந்தையே உயிரிழந்தது என தெரியவந்துள்ளது.

மன்னார் காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

