Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகள் விலை கொடுப்பார்கள், வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள் என்று எச்சரிப்பு
தொகுதி மறுவரையறை மசோதாவை தோல்வியடைய செய்ததற்காக எதிர்க்கட்சிகள் உரிய விலை கொடுக்க நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதா தோல்வியடைந்ததற்கு பிரதமர் மோடி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதை மூடிமறைக்க எதிர்க்கட்சிகள் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இதற்கு அவர்கள் உரிய விலை கொடுப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை ஆதரிக்காததற்காக எதிர்க்கட்சிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை கொண்டிருப்பதை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Delhi,Delhi,Delhi


