ரியல் மாட்ரிட் அணியின் லெஜண்ட் ஜோஸ் எமிலியோ சான்டாமரியா தனது 96ஆவது வயதில் காலமானார். ரியல் மாட்ரிட் அணியின் பொற்காலமான 1950 – 60களில் விளையாடி புகழ்பெற்றவர். உருகுவே நாட்டைச் சேர்ந்த ஜோஸ் எமிலியோ சான்டாமரியா ரியல் மாட்ரிட் அணியில் தற்காப்பு ஆட்டக்காரராக விளையாடி இருந்தார். பின்னர் ஸ்பெய்னுக்கு பயிற்சியாளராக சென்றார். உருகுவேயில் 1929ஆம் ஆண்டு பிறந்த ஜோஸ் எமிலியோ சான்டாமரியா 1957 – 1966 வரை விளையாடி இருந்தார். தனது அபாரமான தடுப்பாற்றல் திறனுக்குப் பெயர் பெற்றவர். இவரது காலத்தில்தான் அல்ஃப்ரெடோ டி ஸ்டெஃபனோ, பிராங் புஸ்கஸ் ஆகியோர் விளையாடினார்கள். ஐரோப்பிய கோப்பைகளை 1958, 1959, 1960, 1966ல் வெல்ல இவர் உதவியுள்ளார். 337 போட்டிகளில் விளையாடிய இவர் 6 ஸ்பானிஷ் கோப்பைகள் வெல்லவும் உதவியுள்ளார்.




