கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக தெதுறு ஓயாவில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உட்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இதையடுத்து இருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. R
