• Login
Thursday, April 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

கைவிட வேண்​டும் – அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்

GenevaTimes by GenevaTimes
April 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
கைவிட வேண்​டும் – அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹோர்முஸ் நீரிணை மீதான தனது முற்றுகையை முடித்துக்கொண்டு, ஈரானுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு சவூதி அரேபியா அமெரிக்காவை வலியுறுத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை அரபு அதிகாரிகள் வால் ஸ்ட்ரீட் ஜர்னலிடம் தெரிவித்ததாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமை, செங்கடல் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் சவூதி எண்ணெய் ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல்கள் போன்ற ஒரு பரந்த பிராந்திய பதற்ற அதிகரிப்பைத் தூண்டக்கூடும் என்று ரியாத் அஞ்சுவதாக அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் போக்​கு​வரத்து முடங்​கும்

சவுதி அரேபிய வட்​டாரங்​கள் ​கூறிய​தாவது:

பெர்​சிய வளை​குடா மற்​றும் செங்​கடலுக்கு நடுவே சவுதி அரேபியா அமைந்​துள்​ளது. தற்​போது பெர்​சிய வளை​கு​டா​வின் ஹார்​முஸ் நீரிணை மூடப்​பட்​டிருப்​ப​தால் செங்​கடல் வழி​யாக சரக்​கு, எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை சவுதி அரேபியா மேற்​கொண்டு வரு​கிறது.

கைவிட வேண்​டும் - அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம் | Saudi Arabia Urges U S To Lift Iran Blockade

தற்​போதைய சூழலில் ஈரானின் தூண்​டு​தலால் ஹவுத்தி கிளர்ச்​சிப் படை செங்​கடலில் அமைந்​துள்ள பாப் அல் மண்​டேப் நீரிணையை மூடும் அபா​யம் உள்​ளது.

அவ்வாறு மூடப்​பட்​டால் சவுதி அரேபி​யா​வின் கடல் வழி போக்​கு​வரத்து முழு​மை​யாக முடங்​கும். உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்கு பற்​றாக்​குறை ஏற்​படும்.



மேலும் உரங்​களுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்டு உணவு தானிய உற்​பத்தி பாதிக்​கப்​படும். வளை​குடா நாடு​களின் ஏற்​றும​தி, இறக்​குமதி மிக​வும் மோசமடை​யும். எனவே ஹார்​முஸ் நீரிணை முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி

இதேவேளை மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளவில் உணவுப் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடும் என உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் இந்தர்மித் கில் (Indermit Gill) எச்சரித்துள்ளார்.

கைவிட வேண்​டும் - அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா கடும் அழுத்தம் | Saudi Arabia Urges U S To Lift Iran Blockade

உலகளாவிய பணவீக்கம் 3 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதம் வரை உயரக்கூடும். அதேவேளை  உலகப் பொருளாதார வளர்ச்சி 40 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மோதல் நிலைமை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை நீடிக்குமானால், ஏழை நாடுகளில் பட்டினிச் சாவு பாரிய அளவில் ஏற்படக்கூடும் என்றும், தற்போதைய சூழலில் ஒவ்வொரு நாளும் இந்த அபாயகரமான நிலையை நோக்கியே உலகம் நகர்ந்து கொண்டிருப்பதாகவும் இந்தர்மித் கில் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

மலேசியாவின் 50 பெரும் பணக்காரர்கள் மேலும் கோடீஸ்வரர்களாக உயர்வு; ஈக்கோ ஷாப் (Eco Shop) நிறுவனரும் பட்டியலில் இணைந்தார் – Malaysiakini

Next Post

“பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு; பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள்…” – பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு; பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள்…” – பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

“பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு; பதவிகள் பறிபோகும் என நினைக்கிறார்கள்…” – பிரதமர் மோடி பேச்சு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin