கடும் மின்னல் தாக்கம் நிலவக்கூடிய வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று (16) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த அறிவிப்பின்படி, மேல் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளத் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

