Last Updated:
இந்த உரையாடலில் உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களும் இடம் பெற்றன.
மேற்காசிய பதற்றம், ஹார்முஸ் நீரிணை விவகாரம் உள்ளிட்டவற்றுடன் உலக விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த தொலைப்பேசி உரையாடல் குறித்துப் பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடுகையில், “எனது நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் நமது இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான அனைத்துத் துறைகளிலும் மேலும் வலுப்படுத்துவதற்கான தங்களின் உறுதியை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். குறிப்பாக, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நிலவும் ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த உரையாடலில் உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களும் இடம் பெற்றன. குறிப்பாக, தற்போதைய மேற்கு ஆசியாவின் பதற்றமான சூழல் குறித்து இருவரும் விவாதித்தனர்.
உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் நீர்சந்தியை’ எவ்வித இடையூறுமின்றித் திறந்து வைத்திருப்பதன் அவசியத்தையும், அதன் பாதுகாப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தையும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
Apr 14, 2026 10:01 PM IST


