Last Updated:
ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், போருக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன் என்றார்
கத்தோலிக்க போப் லியோ மிகவும் மோசமானவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், போருக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன் என போப் லியோ பதிலடி தந்துள்ளார்.
மேற்கு ஆசியாவில் ஈரான் மீது அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப்பாண்டவர் லியோ கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்வினை ஆற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், குற்றங்களைத் தடுப்பதில் போப் “பலவீனமானவர்” என்றும், வெளியுறவுக் கொள்கையில் “மிகவும் மோசமானவர்” என்றும் தனது சமூகவலைதள பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
போப் மற்றும் டிரம்ப்
இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள போப், போருக்கு எதிராக தொடர்ந்து பேசுவேன் என்றார். முன்னதாக போப் லியோவை விமர்சித்திருந்த டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவாக சித்தரித்து ஒரு ஏ.ஐ. படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Apr 14, 2026 10:56 AM IST

