Last Updated:
நமது அண்டை மாநிலமான கேரளாவில் 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியும், ஆண்ட காங்கிரஸ் கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆளும் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, சீமானின் நாதக, விஜயின் தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதேபோல, நமது அண்டை மாநிலமான கேரளாவில் 140 தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியும், ஆண்ட காங்கிரஸ் கூட்டணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இவர்களுக்கு மாற்றாக பாஜக களத்தில் உள்ளது. இந்தத் தேர்தலில் 2 கோடியே 71 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 722 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், தொடர்ந்து 2 முறை வென்ற பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை கைப்பற்ற களமாடுகிறது. மறுபுறம், ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
3 மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் 3 மாநிலங்களிலும் பதற்றமான தொகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு உட்பட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, அசாம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மற்ற 2 மாநிலங்களுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி வெளியாகவுள்ளன.
புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் – பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு!


