கம்போங் காசிப்பிள்ளை ருத்ராதேவி சமாஜத்தின் ஏற்பாட்டில் அன்னையர் தினவிழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சமாஜத்தின் தோற்றுனரான சங்கபூஷண் சுப்பிரமணியம், செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சமாஜத்தின் தலைவருமான குணராஜ் ஏற்பாட்டில் விசேஷ பூஜையுடன் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
சமாஜத்தில் அதிக காலம் சேவையாற்றி இருக்கும் சுப்புலட்சுமி @ ஷோபி, லீவாவதி, தேவயானி ஆகிய மூவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது. அன்னையர் தின விழாவில் உரையாற்றிய குணராஜ் நமக்கு உயிர் கொடுத்த அன்னையை நாம் எப்பொழுதும் போற்றி புகழ வேண்டும். தாய் என்பவள் மட்டும்தான் நம் மீது அன்பை பொழிபவள். ஒரு சிலர் அவர்கள் இருக்கும்போது அதிக அக்கறையுடன் கவனித்து கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயமாகும். தாயை போற்றினால் தெய்வங்களின் கருணை தானாக கிடைக்கும். அன்னைக்கு நிகர் யாரும் இல்லை என்று தமதுரையில் குறிப்பிட்டார்.