வடக்கு இஸ்ரேலை குறிவைத்து ஒரு மணி நேரத்திற்குள் மூன்று தொடர்ச்சியான ஏவுகணை அலைகளை ஈரான் தொடர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக வடக்கு இஸ்ரேலின் கலிலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை ஈரானிய ஏவுகணை தாக்கியதில் ஐம்பத்தொன்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத தொடர்பில் வெளியான அறிக்கையின்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணி நேரத்திற்குள் வடக்கு இஸ்ரேலை குறிவைத்து நடத்தப்பட்ட ஈரானிய குண்டுவீச்சின் மூன்றாவது அலையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலால் சேதம்
மற்றொரு சம்பவத்தில், ஹைஃபா நகரின் கிரியாட் டிவோன் பகுதியில் உள்ள ஒரு கட்டிடம் தாக்குதலால் சேதமடைந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில், மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் ஈரானிய ஏவுகணைகளின் சரமாரியான தாக்குதலை இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட குறைந்தது 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

